தாங்கள் யார் தங்களுடைய ஆயுள் என்ன ? ஆயுள் வரையில் தாங்கள் பொதுவாக எப்படியெல்லாம் வாழப் போகிறீர்கள் என்பதை கூறுவது தான் முதல் காண்டமான பொது காண்டம் மற்ற காண்டங்களின் பலன்களை தனித்தனியாகவும், விரிவாகவும் தெரிந்து கொள்ள இந்த முதல் காண்டமான பொதுகாண்டத்தை பார்த்து தெரிந்து கொண்ட பிறகுதான் மற்ற காண்டங்களில் தங்களுக்குத் தேவைப்படும் காண்டத்தை மட்டும் பார்த்துக் கொள்ள இயலும் என்பது ஓலைச்சுவடி நூலின் விதி.
தாயார், நிலங்கள், மனை, வாகனம், வீடு, கிணறு, நீர்பாசனம், வாழ்க்கையில் அமையும் சுகங்கள், புதையல் மற்றும் மகிழ்ச்சிகளை விவரமாகக் கூறுவது.
குழந்தைகள், பிறப்பு, இறப்பு, புத்திரர்களால் ஏற்படும் நன்மைகள், குழந்தைகள் இல்லாமைக்கு காரணம் முதலியவைகளைக் கூறுவது.
வாழ்க்கையில் ஏற்படும் விரோதி, வியாதி, கடன், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளை நீக்கும் வழிமுறைகளைக் கூறுவது.
திருமணம் நடக்குமா ? அல்லது நடக்காதா ? எந்த வயதில் நடக்கும் என்பதை மட்டும் கூறுவது. இது வரை தடைபட்டு வந்ததற்கு காரணம் என்ன? மேலும் தடைகள் விலகிப்போவதற்கு வழிமுறைகளைக்கூறுவது.
ஆயுளைப்பற்றியும், எத்தனை வயது வரை உயிர் வாழலாம் இடையில் ஏற்படும் கண்டங்கள், விபத்துக்கள் முதலியவற்றை கூறுவது.
தகப்பனார் செல்வம், யோகம், ஆலயதரிசனம் "குருவிடம் " உபதேசம் பெறுதல் முதலியவைகளைக் கூறுவது.
தொழில், வியாபாரம், உத்தியோகம், எந்த விதமான உத்தியோகம் வியாபாரம் அல்லது தொழில் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதனை கூறுவது.
லாபம் எவ்வகையில் கிடைக்கும், என்பதையும் இளைய மனைவி, குதிரை, யானை முதலியவைகளால் அடையும் நன்மைகளைக் கூறுவது.
செலவு, எவ்வகையில் ஏற்பட்டது ஏற்படக் காரணம், மோட்சம் அடுத்த பிறவியில் பிறக்கும் இடம் வாழும் தன்மை, அரசியல் வெளிநாடு செல்வதைப் பற்றியும் அதனால் அடையும் நன்மைகளைக் கூறுவது.
முன்பிறவியில் பிறந்த இடம் செய்த நன்மை, தீமை, அதனால் ஏற்பட்ட பாவத்தால் இந்த ஜென்மத்தில் திருமணம், தொழில், வழக்கு, வியாதி, கடன், அரசியல் தடை போன்ற தீமைகளை விலக்குவதற்குரிய வழிகளைக் கூறுவது.
இந்தபிறவியில் எந்த தெய்வத்தை அதிகமாக வழிபட வேண்டும் அல்லது எந்த தெய்வத்தினால் முன்னேற்றம் கிடைக்கும் என்பதையும் இந்த ஜென்மத்தில் நம் பிறப்பின் விகிதாச்சாரப்படி எந்த மந்திரத்தை எப்பொழுது யாரால் செபிக்கப்பட்டு பெற்றுக் கொள்வது அல்லது எந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் பில்லி சூனியம், கண் எரிப்பு, ஏவல், ஓமல், பொறாமைகள் போன்ற தீமைகள் அகன்று நம் எண்ணங்கள் நிறைவேறும் என்பதை பற்றிக் கூறுவது.
வாழ்க்கையில் நடக்கும் திசைகளின் புத்திகளையும் நடக்கும் பலன்களையும் விபரமாகவும், விளக்கமாகவும் கூறுவது.
வாழ்வில் ஞானமார்க்கம் ஏற்படுமா ? எப்போது எந்த வயதில் யாரால் ஏற்படும்
என்பதைக் கூறுவது.
மகா சிவ வாக்கியரால் எழுதப்பட்ட "நாடிஜோதிட" காண்ட பலனும் உள்ளது. மேலும்
வசிஸ்டர் பெருநூல் நாடி "சுகர் நாடி "விஸ்வாமித்தரர் நாடி" ஜோதிட காண்ட
பலன்கள் சுவடிகளும் உள்ளது.
ஜாதகம் இல்லாதவர்களுக்கு கை பெருவிரல் ரேகையைக் கொண்டு ஜாதகம்
எடுத்துத் தரப்படும் ஜாதகம் உள்ளவர்கள் கொண்டு வருவது நல்லது.
நாடி ஜோதிடத்தில் கூறியுள்ள பரிகாரங்களை முறைப்படி தவறில்லாமல் செய்தார்தான்
பலன்கள் கூறியுள்ளபடி நடக்கும் என்பது நூலின் விதியாகும்.